Sunday, July 27, 2008

BSA ஜக்காத் அமைப்பு

ஜக்காத் பெற்றுக்கொள்ள தகுதியுடைய நன்கு படிக்கும் ஏழை மாணாக்கர்களுக்கு BSA ஜக்காத் அமைப்பின் பேரில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதியுடைய மாணவர்கள் www.bsazakaat.org என்ற இணைப்பை சொடுக்கவும்.

அடியேனுக்கும் பிராத்திக்கவும்.

பிராத்தனைகளுடன்
-M.ரஸீம்

Saturday, July 19, 2008

முதலமைச்சர் இளம் சிறார் இருதய பாதுகாப்புத்

பள்ளிக்கூடங்களில் பிறவி இருதய குறைபாடுகளுடன் உள்ள குழந்தைகளை
ஆசிரியர்கள்
ஒவ்வொரு வருடமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப்பிள்ளைகள் நன்றாக படிப்பவர்களாக இருந்துவிடும்போது அவர்களின்மீது கூடுதல் இரக்கம் பிறந்து விடுகிறது.

ஆசிரியர்களால் இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு உதவி செய்ய முடியாத நிலை. தமிழக அரசின் ஒரு திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரக்ககுணம் உடைய எவரும் வரவேற்க வேண்டிய திட்டம் இது.

இந்த திட்டத்தின் பெயர் "முதலமைச்சர் இளம் சிறார் இருதய பாதுகாப்புத்
திட்டம்" இருதயத்தில் குறைபாடு உள்ள இளம் சிறார்கள் பள்ளியிலேயே சோதனை செய்து கண்டறியப்படுகிறார்கள்.
சாதாரண இருதய மருத்துவ சிகிச்சைக்கு 10,000 ரூபாயும்
சாதாரண திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு 60,000 ரூபாயும்
சிக்கலான திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு 70,000 ரூபாயும் அரசு
வழங்குகிறது.

சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் அவர்கள் விரும்பும்
மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்பது ஒரு நல்ல விஷயம்.

இந்ததிட்டத்தை அனைத்து தொண்டு நிறுவனங்களும் கண்காணித்து ஒருங்கிணைத்து நடத்தவேண்டும்.
இந்த திட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களும், மருத்துவ மனைகளும் முழு
ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும்.

இதுவே நாகரிக உலகத்தின் வேண்டுதலாகும்.

Wednesday, June 11, 2008

தமிழ்நாடு வேலைவாய்ப்பு - பதிவு புதுப்பித்தல்

ஸலாம்,

நீங்கள் தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பீர்களாயின் http://www.employment.tn.gov.in/ இந்த இணைப்பில் நீங்கள் உங்கள் பதிவைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

புதிதாக பதிவு செய்ய விரும்புவோரும், விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, தபால் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வஸ்ஸலாம்
-M.ரஸீம்

Tuesday, June 10, 2008

தமிழ்நாடு பள்ளிப்பாட நூல்கள்

இந்த இணைப்பில், தமிழ்நாடு state board பாடநூல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.............. www.textbooksonline.tn.nic.in வசதி குறைந்த மாணவ/மாணவியருக்கு, நீங்கள் இதை பதிவிறக்கி, அச்சடித்தும் பரிசளிக்கலாம்.

இந்த தகவலை நீங்கள் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள், எங்காவது ஒரு மூலையில் , யாருக்கேனும் உபயோகப்படும்.............

வஸ்ஸலாம்
-ரஸீம்

Monday, June 9, 2008

அறிமுகம் - என்னைப்பற்றி

ஸலாம்(சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்),

எல்லோரும் blogs எழுதுறாங்களே ன்னு , என்னையும் எழுத சொல்லி சில பேர் தூண்டியதால் வந்த (வினை)விளைவு "raseems.blogspot.com".

"முதலில் சுருக்கமாக என்னைப்பற்றி"

பெயர் : M.முஹம்மது முஸத்திக் ரஸீம்
வயது : 26
தொழில் : B.E இயந்திரவியல்
சொந்த ஊர் : கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்
பணிபுரியும் ஊர்: துபை, அமீரகம்.
விருப்பமானவை: எல்லாம்
விரும்பாதவை : ஒன்றுமில்லை

நண்பர்களே, இந்த வலைப்பூ (பல)சில பேருக்கு பயன்படலாம் என்ற தொலைநோக்குப்ப்பார்வையுடன் ஆரம்பம் செய்கிறேன், உங்கள் பின்னூட்டங்களையும், விமர்சனங்களையும் வரவேற்கிறேன்..

பிராத்தனைகளுடன்
M. ரஸீம்